பத்து நிமிஷம் தான்டி.. என்னை வந்து *** விடு.. உதவித்தொகை விண்ணப்பித்த இளம் விதவையிடம் அரசு ஊழியர் காசு கூசும் உரையாடல்
கணவர் இறந்ததால், விதவைகளுக்கான அரசு உதவித்தொகை பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) அணுகிய இளம் விதவை ஒருவர், அந்த அதிகாரியின் முறைகேடான செயல்களால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் விதவையான [பெயர் தவிர்க்கப்பட்டது], தனது தம்பியுடன் விஏஓ அலுவலகத்திற்குச் சென்று உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். ஆனால், விஏஓ ஆரோக்கியதாஸ் அவரை தனியாகப் பேச வேண்டும் என அழைத்துச் சென்று, தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தம்பி, விஏஓவை கடுமையாக விமர்சித்து எச்சரித்தார். இதனால் கோபமடைந்த விஏஓ, இளம் பெண்ணின் விண்ணப்பத்தை நிராகரிக்க பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டார். பிரச்சினையை சுமூகமாக முடிக்க முயன்ற அந்த இளம் பெண், முதலில் பணம் கேட்கப்படுவதாக நினைத்து, தன்னால் முடிந்த பணத்தை லஞ்சமாக வழங்கினார். இருப்பினும், விஏஓ தொடர்ந்து இழுத்தடித்து, அவரை தனிப்பட்ட முறையில் அடைய முயற்சித்தார்.விஏஓவின் உண்மையான நோக்கத்தை உணர்ந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த அநீதியை வெளிக்கொணர முடிவு செய்தார். அவருடனான தொலைபேசி உரையாட...