Posts

Showing posts with the label lease dispute

கலைந்து கிடந்த படுக்கையறை.. வாடைக்கு குடியிருந்த பெண்ணிடம் ஹவுஸ் ஓனர் செய்த செயல்.. சிக்க வைத்த CCTV

Image
கோவை வடவள்ளி பொங்காளியூரில் வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணிடமிருந்து 1 கோடியே 20 லட்ச ரூபாயை வீட்டின் உரிமையாளர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், வீட்டு உரிமையாளரான வேல்முருகன் (41) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வடவள்ளி பொங்காளியூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணனின் மனைவி பிரியா குடியிருந்து வந்தார். இவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த தங்களுக்கு சொந்தமான சொத்தை சமீபத்தில் 3 கோடியே 24 லட்ச ரூபாய்க்கு விற்று, அதில் கடன்கள் மற்றும் செலவுகள் போக மீதமிருந்த 1 கோடியே 20 லட்ச ரூபாயை வீட்டில் வைத்திருந்தார். நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பிய பிரியா, படுக்கையறையில் துணிகள் கலைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பரிசோதனையில், பெட்டியில் இருந்த 1.2 கோடி ரூபாய் மாயமானது தெரியவந்தது. உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளை நடந்தது குறித்து ஆய்வு செய்தனர். எதிர் வீட்டில் உள்ள சிசிட...