Posts

Showing posts with the label commission conflict

திருச்சியில் குலைநடுங்க வைக்கும் படுகொலை.. கும்பலாக காவலரின் வீட்டுக்குள் புகுந்து வெட்டு.. அதிர வைக்கும் பகீர் காரணம்

Image
திருச்சி, நவம்பர் 10: திருச்சி பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் தாமரைச் செல்வன் (25), காவலர் குடியிருப்பில் உள்ள துணை கண்காணிப்பர் (எஸ்எஸ்ஐ) வீட்டிற்குள் பதுங்கியபோதும் துரத்தி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமிஷன் தொடர்பான மோதலில் இந்தக் கொலை நடந்ததாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை கும்பலில் ஐந்து பேர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாமரைச் செல்வன், திருச்சி கடல் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாருனின் மகன். அவர் உள்ளூர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஏஜெண்டாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன், எத்தனை கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் தாமரைச் செல்வனுக்கும் ரியல் எஸ்டேட் கமிஷன் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. இதில் தாமரைச் செல்வன் சதீஷை அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவமானம் அடைந்த சதீஷ், தனது நண்பரான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரபாகரனிடம் இதுகுறித்துப் புகார் செய்தார். பிரபாகரன், தனது நண்பர்களான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கணேசன், நந்து, இளமாறன் ஆகிய...