BMW கார், லட்ச லட்சமாய் பணம், லாட்ஜ் உரிமையாளரிடம் சீரியல் நடிகை ராணி காட்டிய வேலை.. போலீஸில் புகார்.. என்ன நடந்தது..?
கரூர்: பிரபல சின்னத்திரை நடிகை ராணி, அவரது கணவர் பாலாஜி (பாலமுருகன்) மற்றும் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் மோசடி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ விவரம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் ராஜ், கரூர் கோவை சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். தொழில் ரீதியான பணத் தேவைக்காக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பாலாஜி, தனது நண்பர்கள் மூலம் கரூரில் உள்ள வடிவேலு மற்றும் ஆறுமுகம் ஆகியோரை அறிமுகப்படுத்தி, ஒப்பந்த அடிப்படையில் 10 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். பின்னர், தினேஷ் ராஜ் தனது பொருளாதார பிரச்சினையை கூறிய போது, பாலாஜி இரண்டு நாட்களில் சென்னை சென்று தீர்வு காண்பதாக உறுதியளித்தார். அப்போது, தினேஷ் ராஜுக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான BMW கார் மற்றும் அவரது மகளுக்கான 5 சவரன் தங்க நகையையும் திரும்பத் தருவதாகக் கூறி பெற்றுக்கொண்டார். இதற்கு பாலாஜியுடன் வந்த புருஷோத்தமன் நம்பிக்கை அ...