சிகிச்சைக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய காமெடி நடிகர் - ரசிகர்கள் வேதனை..!
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லோகேஷ் பாபு. இவருக்கு சமீபத்தில் பக்கவாதம் வந்து மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். . இவருடைய மருத்துவ செலவுக்காக ரூபாய் 7 லட்சம் தேவை என்று இவரது நண்பர் குட்டி கோபி சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இதன்பின், ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது என்று, குட்டி கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆப்ரேஷனுக்கு பிறகு தற்போது லோகேஷை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்து உதவியுள்ளார். இவர், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடி தான் எனும் படத்தில் இணைந்து நடித்திருந்தார். மேலும் அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், லோகேஷ் பாபு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போயுள்ளார். பலரையும் சிரிக்க வைத்த இந்தகலைஞர் விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது வேண்டுதல்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாகபதிவு செய்து வருகிற...