Posts

Showing posts with the label Menaminukki

மேடம் தாங்க மேனாமினுக்கி.. காதுல பாரு கோல்டு ஜிமிக்கி - மிஸ்டர்.லோக்கல் வீடியோ பாடல்..!

Image
சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர்.லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.  படத்தின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக படம் மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் படம் மே 17-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மேனாமினுக்கி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.