“புட்டுகிட்டு போயிடுச்சு தம்பி” விஜய் எடுத்த முடிவு! விமர்சிக்கும் தொண்டர்கள்!
பிரபல பத்திரிகையாளர் உதவ் நாயக் (Udhav Naig) தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வியாழக்கிழமை (மார்ச் 25, 2026) பதிவிட்ட ஒரு கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் எழுதியது: “By the way, it has been almost 10 days since elections were announced. Does Vijay have any plans to contest or campaign? What a lazy campaign. The neutrals should choose between AIADMK/DMK alliances or NTK, and not waste their time with TVK.” இந்தப் பதிவு விரைவில் வைரலாகி, TVK ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே விவாதத்தை தூண்டியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு 10 நாட்கள் கடந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK)-இன் பிரச்சாரத்தை “சோம்பேறித்தனமானது” என்று விமர்சித்துள்ளார் உதவ் நாயக். இதை பார்த்த மாற்றுக்கட்சி தொண்டர்கள் புட்டுக்கிட்டு போயிடுச்சு தம்பி என்று விஜய்யை கலாய்த்து வருகின்றனர். TVK-இன் நிலைப்பாடு மற்றும் திட்டங்கள் உண்மையில், TVK தரப்பில் தேர்தல் தயாரிப்புகள...