Posts

Showing posts with the label Chinmayi Sripaada

பரிதாபங்கள் கோபி, சுதாகரை போட்டு பொழந்த பாடகி சின்மயி! பத்தி எரியும் சோசியல் மீடியா! என்ன நடக்குது?

Image
பிரபல தமிழ் பின்னணி பாடகியும் சமூக ஆர்வலருமான சின்மயி ஸ்ரீபாதா மீண்டும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தீவிரமான குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு சர்ச்சைக்குரிய பேருந்து சம்பவத்தை மையமாக வைத்து, அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, கேரளாவின் கோழிக்கோடு-கண்ணூர் பேருந்தில் பயணித்த விம்சிதா எனும் பெண், தன்னை தீபக் எனும் ஆண் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலானதால், மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தீபக்கின் தாயார் அளித்த புகாரின் பேரில் விம்சிதா மீது வழக்கு பதிவாகி, அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை சிலர் "பெண்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு" உதாரணமாகக் காட்டினர். யூடியூப் சேனலான பரிதாபங்கள் (Parithabangal) டீமைச் சேர்ந்த சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் இந்த விவகாரத்தை நகைச்சுவையாக ரோஸ்ட் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர்....