Posts

Showing posts with the label emotional moment

25 வயதில் நடந்த சம்பவம், குழந்தை பிறக்காத காரணம்? இதனால் தான் திருமணம் பண்ணிக்கல! - நடிகை மும்தாஜ்

Image
சென்னை : தமிழ் திரையுலகில் தனது கவர்ச்சியான நடிப்பாலும், பாடல்களாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை மும்தாஜ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். 19 வருடங்களாக சினிமாவில் பயணித்து வரும் இவர், தற்போது 38 வயதில் இருந்தாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அவருக்கு திருமணம் மற்றும் குழந்தை பெறும் ஆசையை தூண்டியுள்ளதாக கூறியுள்ளார். மும்தாஜின் திரைப்பயணம் 1999ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்தரின் 'மோனிஷா என் மோனாலிசா' திரைப்படத்துடன் தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக, 'சாக்லேட்' படத்தில் இடம்பெற்ற 'மலை மலை' பாடலும், 'குஷி' படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடிய 'கட்டிப்பிடி கட்டிப்பிடிடா' பாடலும் அவரது டிரேட்மார்க் ஹிட் பாடல்களாக மாறின. இந்தப் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்ற மும்தாஜ், தனது கவர்ச்சியான தோற்றம் மற்றும் நடனத்தால்...

கொடுமை : மகளை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சூரியா! இந்த நேரத்தில் இப்படியா?

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து 2006-ல் திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு, சூர்யா-ஜோதிகா குடும்பம் சென்னையை விட்டு மும்பைக்கு குடிபெயர்ந்தது. முதலில், குழந்தைகளின் படிப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.  ஆனால், ஜோதிகாவின் பெற்றோருடன் இருக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம் என சூர்யா பின்னர் விளக்கமளித்தார். இந்நிலையில், சூர்யாவின் மகள் தியா உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வரும் ஜூலை 2025 முதல் அவர் அமெரிக்காவில் படிப்பை தொடரவுள்ளதாகவும், இதற்கு கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு, ஒரு தந்தையாக சூர்யா உணர்ச்சிவசப்பட்டு அழுததாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே, கங்குவா உள்ளிட்ட படங்களின் தொடர் தோல்விகளால் சூர்யா மன உளைச்சலில் இருக்கும் நிலையில், மகளின் பிரிவு அவருக்கு மேலும் வேதனையை ...