Posts

Showing posts with the label Bengaluru doctor

திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கணவன்.. 6 மாதத்திற்கு பின் சிக்க வைத்த ஆதாரம்.. மனைவி குடும்பத்தினர் மறைத்தது என்ன..?

Image
பெங்களூரு, அக்டோபர் 17: கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹல்லி சேர்ந்த 34 வயது மக்.ரெட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது 28 வயது மனைவி தோல் மருத்துவர் கிருத்திகா ரெட்டியை அறுவை சிகிச்சை அறைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மயக்க மருந்தான 'பிரோபோஃபோல்' ஊசி மூலம் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவியின் உடல்நலக் குறைவுகளை மறைத்து திருமணம் செய்ததால் கோபமடைந்த மக்.ரெட்டி, அந்தக் கோபத்தை கொலை வெறியாக மாற்றி செயல்பட்டதாக போலீஸ் கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இரு மருத்துவர்களான டாக்டர் மகேந்திர ரெட்டியும் டாக்டர் கிருத்திகா ரெட்டியும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின் சில நாட்களிலேயே கிருத்திகாவுக்கு அஜீரணம், வயிற்று பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதாக மக்.ரெட்டிக்குத் தெரிய வந்தது. இந்த உடல்நலக் குறைவுகள் திருமணத்திற்கு முன் மறைக்கப்பட்டிருந்ததால், அவர் அதிர்ச்சியடைந்து கிருத்திகா குடும்பத்தினர்மீது கடும் கோபத்தில் இருந்தார். அந்தக் கோபம் நாளுக்கு நாள் கொலை வெறியாக உருமாறியதாக...