“நடிகையின் புகைப்படம்” சற்று முன் புயலை கிளப்பிய விஜய்யின் மனைவி சங்கீதா!
தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1999ஆம் ஆண்டு திருமணமாகி 27 ஆண்டுகள் கழித்து இந்த முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கீதா தாக்கல் செய்த 12 பக்க மனுவில், தனது கணவர் விஜய்க்கு ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு (extramarital affair) இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதம் இந்த உறவை தான் கண்டுபிடித்ததாகவும், அதன்போது விஜய் அந்த உறவை முடித்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதியை மதிக்காமல், விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் உறவை பேணி வந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு பயணங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இருவரும் ஒன்றாக சென்றதாகவும், அந்த நடிகை விஜயுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் (social media) பதிவிட்டு வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவுகளால் தனக்கும், தங்கள...