மீண்டும் முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்.. அப்போ.. கர்ப்பமான 2வது மனைவியின் நிலை..? கோவையில் கூத்து..
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் திரைப்படங்களில் நடிகராகவும் சமையல் கலைஞராகவும் பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சமையல் காண்ட்ராக்டர் ஆகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் என பல தளங்களில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய ஒரு நபர். சமீபத்தில் இவருடைய தனிப்பட்ட இமேஜ் பொதுமக்கள் மத்தியில் ஏகத்துக்கும் அடி வாங்கியது. இதற்கு காரணம் இவருடைய இரண்டாவது திருமணம் தான். இவருடைய ஆடை வடிவமைப்பாளராக வேலைக்கு சேர்ந்த ஜாய் கிரிஸில்டா என்பவர் நட்பாகி அந்த நட்பு ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருவருக்கும் இடையே ஒரு கருவும் உண்டாகி இருக்கிறது. அந்த கருவிற்கு தற்போது ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில், கடந்த மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடைய கணவர். அவருடைய வாரிசை என் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது அதிர்வலைகளை கிளப்பியது. மட்டுமில்லாமல் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர வைத்திருந்தார் ஜாய் கிரிஸில்டா. இந்நிலையில், கோவை கொடிசியா...