Posts

Showing posts with the label private survey

அரசியலில் எதிர்பாராத திருப்பம்! NDA கூட்டணியில் தவெகவுக்கு எத்தனை சீட்?

Image
சென்னை, மார்ச் 9: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தபோது, அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், கூட்டணி இல்லாத நிலையில் தனியார் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள், தேர்தல் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு (தி.மு.க) சாதகமான முடிவுகளை வெளியிட்டன. இருப்பினும், விஜய்யின் பெரும் வரவேற்பு ஒரு 'அலை'யை உருவாக்கும் என நம்பப்பட்டது. இந்நிலையில், கூட்டணி இல்லாமை கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோடு, விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்து நடத்தி வரும் விவாகரத்து வழக்கு அவரது பொது இமேஜை பாதித்துள்ளதாகவும், தனித்துப் போட்டியிட்டால் வாக்குகளைப் பிரிக்க மட்டுமே முடியும் ஆனால், விஜய் வெற்றி பெறுவதே கடினம் எனவும் விஜய் சார்பில் நடத்தப்பட்ட தனியார் சர்வேக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த சூழலில், TVK தனது கொள்கையை சமரசம் செய்யாமல், 'தேர்தலுக்காண கூட்டணி' என்ற பெயரில் 40 தொகுதிகளை வேண்டிய அதிமுக-பாஜக கூட்டணியில் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது இதுவரை அதிகாரப்பூர்வம...