ஹன்சிகா வடை.. தமன்னா போண்டா.. கூட சரி.. அது என்ன நயன்தாரா டீ.. தீயாய் பரவும் கன்றாவி புகைப்படம்..
தமிழ்நாட்டில் நடிகைகளின் பெயரில் உணவு விற்கும் ஒரு டீக்கடையின் போஸ்டர் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நயன்தாரா டீ, தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஆகியவை 5 ரூபாய் விலையில் விற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டர், ரசிகர்களிடையே கலகலப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளுக்கு கோவில் கட்டுவது முதல், அவர்களது பெயரில் உணவு பொருட்களை அறிமுகப்படுத்துவது வரை தமிழக மக்களுக்கு பழக்கமான விஷயமாகிவிட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக, குஷ்பு இட்லி 20 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் நிலைத்து நிற்கிறது, இன்னும் அதை மிஞ்சும் இட்லி எதுவும் வரவில்லை. இந்த புதிய டீக்கடை போஸ்டரை பார்த்த ரசிகர்கள், “தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஓகே… ஆனால் நயன்தாரா டீ என்றால் என்ன? அதை எதில் போடுவீர்கள்?” என்று நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதை அச்சமூட்டும் வகையில் கேலியாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தமிழகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், அதன் வைரல் தன்மை காரணமாக பலரது கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் தெரிகிறது. இது போன்ற நடிகைகளின் பெயரில் உணவு வைக்கும் ப...