Posts

Showing posts with the label Chief Minister

சேர்ந்து வாழ முடிவு பண்ணிட்டாங்க? VIJAY SANGEETHA REUNION! SOBHA அம்மா வெளியிட்ட இன்ப அதிர்ச்சி வீடியோ!

Image
சென்னை : தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாளை (ஜூன் 15) விசாரணைக்கு வர இருக்கும் இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில், குடும்பத்தினரின் தலையீடு இந்த சூழ்நிலையை மாற்றியுள்ளது.  விஜயின் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் இணைந்து வாழ அறிவுரை வழங்கியதாகவும், அதனை ஏற்று விவாகரத்து மனுவை திரும்பப் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், விஜய் அரசியல் களத்தில் களமிறங்கிய பிறகு அவரது குடும்ப விவகாரங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்படாமல் இருந்தன. தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வர இருந்த விசாரணையை தேர்தல் முடிவுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளைய விசாரணையின்போது விஜய் வீடியோ கால் மூலம் பங...

ரிதன்யா பெற்றோர் எடுத்த திடீர் முடிவு - மீண்டும் பரபரப்பு

Image
அவினாசி : வரதட்சனை கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா என்னும் இளம்பெண்ணின் தந்தை, அவினாசி சட்டமன்ற உறுப்பினர் கமலி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ரிதன்யாவின் தந்தை தனது மகளின் மரணம் தொடர்பாக கூறியதாவது: “இறந்த என் மகள் ரிதன்யாவினுடைய விசாரணைக்காக அவினாசி சட்டமன்ற உறுப்பினர் கமலி அவர்களை நேரில் சந்தித்து, நடைத்துறை அமைச்சரை சந்தித்து என் மகளின் இறப்புக்கு நீதி கோரி விண்ணப்பம் கொடுத்துள்ளேன். இது நேரடியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சென்று, விசாரணைக்கு நீதி வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.” மகள் இறந்து 11 மாதங்கள் ஆகியும் போலீசார் முறையான விசாரணை செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். “எங்களையே இதுவரை வந்து விசாரிக்கவில்லை. முறையான விசாரணை இல்லை” என்றார். மேலும் அவர் கூறியதாவது: “பாப்பா பயன்படுத்திய பணம், நகை, வரதட்சனையாக வாங்கிய கார், நகைகள் உள்ளிட்டவை இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை. எங்களைப் போன்ற பெற்றோர்கள் குழந்தையை ...

காணாமல் போன 17 தவெக MLA-க்கள்? என்ன நடக்குது தமிழக அரசியலில்! திமுக எடுத்த பிரம்மாஸ்திரம்!

Image
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தபோது 17 எம்எல்ஏக்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு (118) சில இடங்கள் குறைவாக உள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்களை மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் ரிசார்ட்டில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் 17 பேர் காணாமல் போனதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் ‘துரோகம்’ – திமுக-அதிமுக உறவு? இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்தது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்த நடவடிக்கையை “துரோகம்” எனக் கருதும் திமுக, அதிமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. க...

கூட்டணியில் அதிரடி திருப்பம்! வந்தது தமிழகமே எதிர்பார்த்த பிரேக்கிங் நியூஸ்!

Image
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சி, ஆட்சி அமைக்கும் முயற்சியில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்துகள் எழுந்தன.  ஆனால், சிறிய கட்சிகளுடன் உருவாகும் கூட்டணி ஸ்திரமற்ற ஆட்சியை மட்டுமே வழங்கும், திமுக நாளுக்கு நாள் ஏதாவது குடைச்சலை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால், பெரிய கட்சியான அதிமுகவுடன் இணைவது தான் சிறந்த வழி என்று அரசியல் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தவெக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்தப் பேச்சுகள் முன்னேறும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்...

முதல்வராகிறார் எடப்பாடி பழனிசாமி? வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சி! பரபரப்பு தகவல்கள்!

Image
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் தமிழக அரசியல் வட்டாரத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 107-108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு (118) சற்று குறைவாக உள்ள நிலையில், திமுக 59-60 இடங்களுடனும், அதிமுக 47 இடங்களுடனும் பின்தங்கியுள்ளன. இந்த அதிர்ச்சி முடிவுகளுக்கு மத்தியில், அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஒரு புதிய ஊகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது – அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) முதலமைச்சராகப் பதவியேற்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் ஒரு ‘அதிரடி’ உடன்பாடு உருவாகலாம் என்பதாகும். தேர்தல் முடிவுகளின் அதிர்ச்சி அலைகள் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் நெருங்கிய வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றாலும், கட்சி ஒட்டுமொத்தமாக 47 இடங்களிலேயே தங்கியுள்ளது. விஜயின் தவெக புதிய சக்தியா...

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி.. உண்மையில் இது தான் நடந்தது.. கதறும் A2D நந்தா.. கொடூரம்.. அதிர்ச்சியில் சோல்ஜர்ஸ்

Image
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்த ‘தலைவனே 2.0’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தொழில்நுட்ப யூடியூபர் A2D நந்தா, தான் மற்றும் தனது நண்பர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நந்தா தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: “நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தபோது, ‘முதலமைச்சரிடம் நீங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கலாம், உங்கள் விருப்பங்களைத் தெரிவிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதை நம்பி நாங்கள் சென்றோம். ஆனால் அங்கு சென்றவுடன் எங்களிடம் ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டு, ‘இந்தக் கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்’ என்று கூறினார்கள். அந்தக் கேள்விகளைப் படித்த பிறகு, ‘எங்கள் பாலோவர்களே நம்மைத் தாக்கிவிடுவார்கள்; இது பெரிய பின்னடைவாக மாறிவிடும்’ என்று என்னுடன் வந்த எனது நண்பர் பிரபுவுடன் முடிவு செய்து, நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிப் போக முயன்றோம். ஆனால், அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்புப் படை மற்றும் பறக்கும் படைய...

பதவியேற்புக்கு நாள் குறித்த விஜய்! எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் தெரியுமா?

Image
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்காத சூழலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் அளப்பறையின் உச்சத்தில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் 8-9 நாட்கள் இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்கெனவே வெற்றி போஸ்டர்களை அடித்து ஒட்டி, விஜய்யை முதலமைச்சராக்கியதாக அறிவித்து, அமைச்சரவை பட்டியல் வரை தயாரித்து வைத்துள்ளனர். சென்னை பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், திருப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயராஜ் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில், “தளபதி விஜய் அண்ணாவை 206-வது தமிழ் முதல்வராக்கிய பொதுமக்களுக்கு நன்றி” என்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் இந்த போஸ்டர்கள் ஏற்கெனவே ஒட்டப்பட்டு பரவலாகப் பகிரப்படுகின்றன. இது மட்டுமின்றி, TVK தொண்டர்கள் முழு அமைச்சரவை பட்டியலையும் தயாரித்து வைத்துள்ளனர். விஜய் முதலமைச்சர் பொறுப்புடன் உள்...

மருத்துவர் கண்காணிப்பில் முதல்வர்.. அப்போலோ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..

Image
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைச்சுற்றல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மருத்துவமனையின் அறிக்கையின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு சில கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இருப்பினும், முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் முதலமைச்சரிடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.  தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் முதலமைச்சர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முதலமைச்சரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் நலமுடன் உள...