Posts

Showing posts with the label Devi Kala

திருவண்ணாமலை: மாமியாரை கழுத்து நெறித்துக் கொன்று 20 நாட்களுக்கு மேல் நாடகம் ஆடிய 24 வயது மருமகள் கைது!

Image
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், தனது மாமியாரை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு, “திடீர் உடல்நலக் குறைவு” என்று நாடகம் ஆடி மருத்துவமனையில் அனுமதித்து, 20 நாட்களுக்கு மேல் கமுக்கமாக இருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேவிகலா ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியாற்றும் சிராளன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிராளன் ராணுவப் பணியில் இருப்பதால், அவரது தாய் கோவிந்தம்மாளை மனைவியின் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் சென்றிருந்தார். சிராளனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்று வேலூர் உள்ளிட்ட இடங்களில் செட்டில் ஆகியுள்ளனர். தந்தை இறந்துவிட்ட நிலையில், தாய் கோவிந்தம்மாள் மட்டும் மருமகள் தேவிகலாவுடன் வசித்து வந்தார். சந்தேகத்துக்கு வித்திட்ட குடும்பப் பிரச்னை கோவிந்தம்மாளுக்கு தனது மருமகள் மீது தொடர்ந்து சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிராளனின் சகோதரிகளுக்கு குழந்தை பிறக்காத நிலையில், தேவிகலாவுக்கு மட்டும் இரண்டு குழந்தைகள் (முத்து போல) ...