விடிய விடிய கொடூரம்.. 21 வயது மாணவனுடன் 55 வயது பெண்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
கரீம்நகர் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால், 21 வயது மாணவர் ஒருவர் 55 வயது பெண்ணிடம் இருந்த நகைகளை பறித்து அவரை கிணற்றில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, நீச்சல் தெரிந்த அந்தப் பெண் 21 மணி நேரம் போராடி உயிர் பிழைத்து, விவசாயிகளால் மீட்கப்பட்டார். சம்பவம் குறித்த விவரங்கள்: கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவர், ஒரு மாணவராவார். ஆன்லைன் சூதாட்ட தளங்களில் ஈடுபட்டு சுமார் ₹4 லட்சம் அளவுக்கு தோற்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த கடனை அடைக்கும் நோக்கில் அவர் திட்டம் ஒன்றை தீட்டியதாக கூறப்படுகிறது. தினேஷ், லட்சுமி (55) என்பவரை "வேலை தருவதாக" கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரிடமிருந்த நகைகளை பலவந்தமாக பறித்து, அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். நீச்சல் அறிந்த லட்சுமி, கிணற்றுக்குள் விழுந்ததும் தண்ணீரில் மூழ்காமல் ஒரு பைப்பைப் பிடித்தபடி 21 மணி நேரம் வரை தொங்கியவாறு உயிர் பிழைத்தார். இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு வந்து, அவரை மீட்டு மருத்த...