மகளின் Tight ஆன Tennis ஆடையால் நேர்ந்த விபரீதம்.. நேரில் பார்த்த தாய்.. தலை சுற்ற வைக்கும் தகவல்..
குருகிராம், அக்டோபர் 27, 2025: ஹரியானா மாநிலம் குருகிராமத்தின் சுஷாந்த் லோக் பகுதியில் ஜூலை 10 அன்று நடந்த கொடூரமான ஆணவ கொலை சம்பவத்தில், 25 வயது டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ராதிகா யாதவை அவளது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றதாக போலீஸ் குற்றஞ்சாட்டு தாள் தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் பெயரில் நடந்ததாகவும், தந்தை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலை 10 அன்று காலை நேரத்தில், ராதிகா தனது வீட்டு கிச்சனில் சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் தன்னுடைய லைசன்ஸ் பெற்ற 32 காலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி அவளது முதுகில் நான்கு தோட்டாக்களை சுட்டு இறக்கினார். அருகருகே நடந்த இந்தத் தாக்குதலால் ராதிகா உடனடியாக இரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டு சரிந்தால், அறை முழுதும் ரத்தம்.. உடனே அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோதும் உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த அவளது சித்தப்பா குல்தீப் யாதவ் மற்றும் அவரது மகன் பியூஸ் யாதவ் மருத்துவமனைக்கு விரைந்தனர், ஆனால் டாக்டர்கள் அவளை காப்பாற்ற முடியவில்லை. போலீ...