எப்படி நியமிக்கப்பட்டார் அருண் IPS? திமுக வழியில் தவெக! சவுக்கு சங்கர் கூறிய பகீர் தகவல்கள்!
சென்னை : தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை (Anti-Corruption Bureau) இயக்குநராக முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. அருண் நியமிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார் சவுக்கு சங்கர். பேசு தமிழா பேசு யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், இந்த நியமனம் விஜய் தலைமையிலான தவெக அரசின் "தூய சக்தி" உருவாக்கும் உறுதிமொழிக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார். முக்கிய குற்றச்சாட்டுகள்: ஊழல் மற்றும் சொத்து சேர்ப்பு: அருண் ஐபிஎஸ், கொரட்டூர் விநாயகம், கௌதம் (தங்க மோசடி) போன்றவர்களுடன் தொடர்பு வைத்து, சென்னையை "வேட்டையாடி" 500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார். இதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முதல்வர் விஜயிடம் நேரடியாக சமர்ப்பிக்க தயார் என்றும் அவர் அறிவித்தார். தனிப்பட்ட அனுபவம்: தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தனது ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டதும். கடந்த ஆட்சியில், கைது, சிறைவாசம், அலுவலகங்கள் சீல் வைப்பு, எனது ஊழியர்களின் பைக்குகள் பறிமுதல் போன்ற அடக்குமுறைகளுக்கு அருண்தான் முக்கியப் பொறுப்பு என்றார். பிரச்சாரத் தடை: த...