அம்மாவின் காதலனுடன் காதலில் விழுந்த மகள்.. வெறும் 5 துளி ரத்தம்.. மர்மத்தை அவிழ்ந்த சித்தி..
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள குருவினத்தம் ஊரில் 2022-ஆம் ஆண்டு நடந்த கொடூரக் கொலை வழக்கில், மீன் வியாபாரி ஞானசேகரன் (48) என்பவரை அவரது மனைவி ராணி (38), காதலன் கார்த்திக் (24), மகள் சுதா (16) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் ராணி மற்றும் கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனையும், சுதாவிற்கு சிறார் சீர்திருத்தப் பள்ளி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம்: தவறான உறவும் காம வலையும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராணிக்கும் அக்கம் பக்கத்து மரக்கடை உரிமையாளரான கார்த்திக்கிற்கும் பல மாதங்களாக தகாத உறவு இருந்துள்ளது. இதை மறைக்கவே ஞானசேகரனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், ராணி தன் 16 வயது மகள் சுதாவையும் இந்த வலையில் இழுத்து, “அப்பா இல்லையென்றால் உனக்கு கார்த்திக் கல்யாணம் ஆகிடும்” என மூளைச்சலவை செய்துள்ளார். சுதா இதை நம்பி கொலையில் பங்கேற்றுள்ளார். முதல் முயற்சி தோல்வி, இரண்டாவது முயற்சியில் கொலை 2022 அக்டோபர் 13 அதிகாலை 3 மணிக்கு ஞானசேகரன் மீன் மார்க்கெட்டிலிருந்து ஆட்டோவில் திரும்பியபோது, கார்த்திக் ஓட்டிய வாடக...