Posts

Showing posts with the label petition

ரிதன்யா பெற்றோர் எடுத்த திடீர் முடிவு - மீண்டும் பரபரப்பு

Image
அவினாசி : வரதட்சனை கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா என்னும் இளம்பெண்ணின் தந்தை, அவினாசி சட்டமன்ற உறுப்பினர் கமலி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ரிதன்யாவின் தந்தை தனது மகளின் மரணம் தொடர்பாக கூறியதாவது: “இறந்த என் மகள் ரிதன்யாவினுடைய விசாரணைக்காக அவினாசி சட்டமன்ற உறுப்பினர் கமலி அவர்களை நேரில் சந்தித்து, நடைத்துறை அமைச்சரை சந்தித்து என் மகளின் இறப்புக்கு நீதி கோரி விண்ணப்பம் கொடுத்துள்ளேன். இது நேரடியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சென்று, விசாரணைக்கு நீதி வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.” மகள் இறந்து 11 மாதங்கள் ஆகியும் போலீசார் முறையான விசாரணை செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். “எங்களையே இதுவரை வந்து விசாரிக்கவில்லை. முறையான விசாரணை இல்லை” என்றார். மேலும் அவர் கூறியதாவது: “பாப்பா பயன்படுத்திய பணம், நகை, வரதட்சனையாக வாங்கிய கார், நகைகள் உள்ளிட்டவை இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை. எங்களைப் போன்ற பெற்றோர்கள் குழந்தையை ...

த.வெ.க ஆட்சி! ரூட்டை மாற்றிய விஜய்! மெகா திருப்பம்..

Image
சென்னை: தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) சார்பில் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வாதாட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று ஆளுநர் மாளிகையில் த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் சந்தித்து, தங்கள் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால் உடனடியாக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். வழக்கமாக, தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவரை ஆளுநர் அழைத்து பதவி ஏற்கச் செய்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்குவார். ஆனால், இந்த முறை ஆளுநர் தரப்பில் அத்தகைய அழைப்பு விடுக்கப்படவில்லை என்று த.வெ.க தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக த.வெ.க தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்துள்ளது. ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர்கள் மூலம் வழக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வ...

“நடிகையின் புகைப்படம்” சற்று முன் புயலை கிளப்பிய விஜய்யின் மனைவி சங்கீதா!

Image
தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1999ஆம் ஆண்டு திருமணமாகி 27 ஆண்டுகள் கழித்து இந்த முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கீதா தாக்கல் செய்த 12 பக்க மனுவில், தனது கணவர் விஜய்க்கு ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு (extramarital affair) இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதம் இந்த உறவை தான் கண்டுபிடித்ததாகவும், அதன்போது விஜய் அந்த உறவை முடித்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதியை மதிக்காமல், விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் உறவை பேணி வந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு பயணங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இருவரும் ஒன்றாக சென்றதாகவும், அந்த நடிகை விஜயுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் (social media) பதிவிட்டு வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவுகளால் தனக்கும், தங்கள...