மாத்திரை விழுங்கிய குழந்தை உயிரிழந்தது எப்படி? பெற்றோர்களே மிக மிக கவனம்..!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்த வேலூர் சசிகலா தம்பதியினரின் நான்கரை வயது குழந்தை, மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 18 அன்று காலை, குழந்தைக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்து, காய்ச்சலுக்கான மாத்திரைகளை பரிந்துரைத்தார். மாத்திரைகள் பெரியதாக இருப்பதால், அவற்றை இரண்டாக உடைத்தோ அல்லது தண்ணீரில் கரைத்தோ கொடுக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இரவு 8 மணியளவில், உணவு உட்கொண்ட பிறகு, பெற்றோர் மாத்திரையை இரண்டாக உடைத்து குழந்தைக்கு கொடுத்தனர். ஆனால், மாத்திரை குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால், குழந்தை துடிதுடித்ததாகத் தெரிகிறது. பதறிப்போன பெற்றோர், உடனடியாக குழந்தையை மீண்டும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மாத்திரை குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருப்பது உறுதியானது. இருப்பினும், சில நிமிட...