Posts

Showing posts with the label Malayalam movie

“உள்ளாடைக்குள் அதை வைத்து” பலமுறை கருக்கலைப்பு! இயக்குனர் மீது கும்பமேளா மோனலிஷா பகீர் புகார்!

Image
திருவனந்தபுரம், மார்ச் 26, 2026: 2025 மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்ற ஒரு எளிய நாடோடி பெண்ணாக அறியப்பட்ட மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) இன்று இந்திய சமூக ஊடகங்களின் சென்சேஷனாக மாறியுள்ளார். அவரது இயல்பான அழகு, நம்பிக்கையான பேச்சு மற்றும் கண்கள் கவரும் சிரிப்பு ஆகியவை அவரை ஒரே இரவில் நாட்டின் பிரபலமாக்கின. ஆனால் அந்த புகழுக்கு பின்னால் சினிமா வாய்ப்புகள், பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சை, குடும்ப எதிர்ப்பு, காதல் திருமணம் என பல்வேறு திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணம் அவருக்கு காத்திருந்தது. தற்போது அவரது காதலன் ஃபர்மான் கானுடன் (Mohammad Farman Khan) திருமணம் செய்து கொண்ட நிலையில், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது புதிய குற்றச்சாட்டுகளை எழுப்பி அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்து பாரதி நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மோனாலிசா, தனது குடும்பத்துடன் திருவிழாக்களில் பாசிமணி ருத்ராட்ச மாலைகளை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். 2025-ம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் அவர் மாலை விற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு யூடியூபர் அவரை வீடியோ எடுத்த...