“கேக்கவே காது கூசுது..” ஸ்கேன் எடுக்க வந்த 47 வயது பெண்.. லேப் டெக்னீசியன் செய்த கொடூரம்.. சென்னையில் அசிங்கம்..
சென்னை, டிசம்பர் 9 : சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில், ஸ்கேன் எடுக்க வந்த 47 வயது பெண்ணிடம் லேப் டெக்னீசியன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்திருப்பதால், அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்க வந்தபோது, ஸ்கேன் செய்து கொண்டிருந்த லேப் டெக்னீசியன் கவின் என்பவர் தனிமையில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். உடனடியாக கத்திய பெண்ணை மற்ற ஊழியர்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், கொளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கவினை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்...