அடேங்கப்பா.. 372 % சொத்து குவித்தது எப்படி? பெண் காவல் ஆய்வாளருக்கு செக்..
சென்னை: பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் எட்டு ஆண்டுகளில் 372% அதிகமான சொத்துக்களை குவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு (Anti-Vice Squad)-இல் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் கே. ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் (Disproportionate Assets) குவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது. ராஜலட்சுமி 1999-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக (Sub-Inspector) காவல்துறையில் சேர்ந்தார். 2010-ஆம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர், சென்னையில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு உள்ளிட்ட முக்கியமான மற்றும் உணர்திறன் மிக்க பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரகசிய விசாரணையில், 2017 ஜூன் முதல் 2025 ஜூன் வரையிலான எட்டு ஆண்டு காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவரிடம் இருந்த சொத்து மதிப்பு: ரூ...