மாதம்பட்டி ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யாரு தெரியுமா..? தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..
தமிழ் திரையுலகில் பணியாற்றிய ஜாய் கிரிசில்டா, கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் ஜே ஜே ப்ரெட்ரிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கியது, மேலும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்துக்குப் பின்னர், ஜாய் கிரிசில்டா திரைத்துறையில் இருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தினார். ஆனால், ஐந்து ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்தத் தம்பதிக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை அடுத்து, 2023-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களது பிரிவு, திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜே ஜே ப்ரெட்ரிக், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குநர். இவர் இயக்கிய பொன்மகள் வந்தாள் திரைப்படம், நடிகை ஜோதிகாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அமைந்தது. 2020-ம் ஆண்டு கொரோனா லாக்டவுன் காலத்தில் இப்படம் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக நீதி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசிய இந்தப் படம், ப்...