Posts

Showing posts with the label Angadi Theru

“அங்காடி தெரு” சோபியா இப்போ என்ன செய்கிறார் பாருங்க..! சோகத்தை கடந்து மகிழ்ச்சி!

Image
தமிழ் சினிமாவில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ திரைப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் மகேஷ், அஞ்சலி, பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  சென்னை டி.நகரில் உள்ள கடைகளில் பணியாற்றுபவர்களின் சிரமங்களை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த படம், தனித்துவமான கதைக்களத்திற்காக பாராட்டப்பட்டது.  இதில் ‘சோபியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுகுணா. ஆனால், இவர் படத்திற்கு பிறகு திரையுலகில் தொடர்ந்து நடிக்கவில்லை, இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘அங்காடித் தெரு’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜனை சுகுணா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கர்ப்பமான அவர், 8வது மாதத்தில் குழந்தை இறந்ததால் கரு கலைப்பு செய்யப்பட்டது.  இந்த துயரமான சம்பவம் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சினிமா பக்கம் திரும்ப முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது சுகுணாவுக்கு ஒரு மகன் உள்ளதாகவும், அவர் ஒரு பியூட்டி பார்லர் தொடங்கி அதில் தனது கவனத்தை செலுத...

நடித்த முதல் படமே ப்ளாக்பஸ்டர் - இப்போது என்ன செய்கிறார் "அங்காடி தெரு" ஹீரோ மஹேஷ்..!

Image
அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இந்த திரைப்படம் மகேஷ் - அஞ்சலி என இருவருக்குமே திரையுலகில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படம் இவருக்கு அறிமுகப்படமாக இருந்தாலும், இவரின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். இந்த படத்தை தொடர்ந்து, 'மகேஷ்' நடித்த 'கொஞ்சம் பாவம் கொஞ்சம் சிரிப்பு', 'யாசகன்', 'வேல்முருகன் போர்வெல்ஸ்', 'இரவும் பகலும் வரும்', ஆகிய படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக 2015ம் ஆண்டு படம் வெளியானது. கடந்த நான்கு வருடமாக எந்த படமும் இவர் நடிப்பில் வெளியாகவில்லை. இந்நிலையில் 'என் காதலி சீன் போடுறா' என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் திருமணம் குறித்தும் சினிமா பயணம் குறித்தும் கேள்வி எழுப்பிய போது, காதல் திருமணம் மட்டும் இல்லைவே இல்லை என அடித்துக் கூறியுள்ளார். பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், காதலி...