தொடர்ந்து 25 முறை.. சடலமான பின்னும் விடாமல் காதலன் செய்த அசிங்கம்.. விசாரணையில் நடுங்க வைக்கும் தகவல்கள்..
பெங்களூரு : கர்நாடக தலைநகரான பெங்களூருவில், காதல் தோல்வியால் ஆத்திரமடைந்த 35 வயது டிரைவர் ஒருவர், தனது காதலியை பொது இடத்தில் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நகரையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஜெயநகர் பகுதியில் உள்ள ஷாலினி பூங்காவில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில், கொல்கத்தாவைச் சேர்ந்த 42 வயது விதவை பரிதா கானம் உயிரிழந்தார். குற்றவாளி கிரீஷ் (aka) ரியான் கான் போலீசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், விசாரணையில் அவரது மத மாற்றம், திருமண தடைகள் உள்ளிட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலை நகரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: காதலும், திருமண ஏக்கமும் பெங்களூரு எடியூர் பகுதியைச் சேர்ந்த கிரீஷ், பெயரை ரியான் கான் என மாற்றிக்கொண்டு, கார் டிரைவராக பிழைப்பு நடத்தி வந்தார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர், 2011ஆம் ஆண்டு முஸ்லிம் மதத்திற்கு மாறியிருந்தார். ஆனால், அவருக்கும் அவரது தங்கைக்கும் திருமண வரன் கிடைக்காமல் போனதால், மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளார். இந்த பின்னணியில், 2022ஆம் ஆண்டு பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வ...