காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமியின் மகள் வெடித்த சர்ச்சை..?
பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி காணாமல் போயிருப்பது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்லவியைத் தேடி வருகின்றனர். பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவம் படித்துள்ள 24 வயதாகும் மூத்த மகள் பல்லவி. கடந்த ஞாயிற்றுகிழமையன்று , தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பின், பல்லவி வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதையடுத்து, குப்புசாமியின் உறவினர் ஒருவர் பல்லவி காணாமல் போனதாக அபிராமபுரம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பல்லவி தன்னுடைய முகநூல் பக்கத்தில் "நான் காணாமல் போகவில்லை, யாரும் என்னை கடத்தவில்லை, நலமாக உள்ளேன், தவறான தகவல்களை நம்ப வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.