ஆசிரியையின் உதட்டை கடித்து துப்பிய மாணவன்! தீயாய் பரவும் CCTV வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரி (மெயின்புரி) மாவட்டத்தில் உள்ள ஆக்ரா சாலை பகுதியில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 25 வயது பெண் ஆசிரியை, அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவனால் தொடர்ந்து தொல்லைக்கு ஆளானார். மாணவன் ஆசிரியையை ஒருதலைக்காதல் கொண்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஆசிரியை, மாணவனுக்கு பலமுறை அறிவுரை கூறி புரிய வைக்க முயன்றார். ஆனால் மாணவன் அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். இதனால் வேதனையடைந்த ஆசிரியை, மாணவனின் பெற்றோரை சந்தித்து முழு விவரத்தையும் தெரிவித்து கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டார். மாணவனின் தாயார் இனி அப்படி நடக்காது என உறுதி அளித்து மகனை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் இதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாணவனின் நடத்தை முன்பைவிட மோசமடைந்தது. பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் தீவிரமடைந்ததால் மனமுடைந்த ஆசிரியை அந்த பள்ளியில் இருந்து விலகி, அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் ஆசிரி...