Posts

Showing posts with the label Coimbatore student

கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. செய்தவர்கள் சாதாரண ஆள் இல்லை.. பின்னணியில் திடுக் தகவல்..!

Image
கோவை, நவம்பர் 3: தமிழ்நாட்டின் கோவை நகரில் உள்ள கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி, ஆசாமிகளால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஏர்போர்ட் பின்புறம் பிருந்தாவன் நகரில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், மாணவியின் ஆண் நண்பரும் காயமடைந்தார். பீழமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று குற்றவாளிகளின் அடையாளம் தெரிந்த நிலையில், ஏழு தனிப்படைகளை அமைத்து அவர்களைத் தேடி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த இந்த மாணவி, கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த அவர், கல்லூரி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வெளியே செல்ல முடிவு செய்தார். மாணவியின் தோழன் தனது காரை எடுத்துக் கொண்டு வந்ததோடு, இருவரும் இரவு நேரத்தில் ஏர்போர்ட் பின்புறம் பிருந்தாவன் நகரில் உள்ள காலி இடத்தில் காரை நிறுத்தினர். காருக்குள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், இரவு 11 மணியளவில் மூன்று ஆசாமிகள் திருட்டு டூவீலர் பைக்கில் அங்கு வந்தனர். பொருளாதார நெருக்கடி, கடன்...