மனைவியின் தம்பிக்கு அப்பாவான கணவன்! 53 வயது மாமியாருடன் செய்த அசிங்கம்! விசாரணையில் பெரும் ட்விஸ்ட்!
கொல்கத்தா : கணவன்-மனைவி உறவின் புனிதத்தை உடைத்து, மாமியாருடன் தகாத உறவு வைத்து, அதன் விளைவாகப் பிறந்த குழந்தை தன் மனைவிக்கு தம்பியாக மாறிய கொடூரமான சம்பவம் கொல்கத்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விசாரணையில் வெளிவந்த ட்விஸ்ட் அனைவரையும் திகைக்க வைத்தது. 53 வயதான அனுராதா பானர்ஜி (பெயர் மாற்றப்பட்டது), தன் கணவரை இளம் வயதிலேயே இழந்து தனிமையில் வாடியவர். ஒரே மகள் பூஜா பானர்ஜிவின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வந்த அனுராதா, வாழ்க்கைச் செலவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருந்த அர்ஜுன் கோஷ் (37), அனுராதாவின் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். 53 வயதானாலும், 30-35 வயது மதிக்கத்தக்க வாட்டசாட்டமான தோற்றம் கொண்ட அனுராதா மீது அர்ஜுனுக்கு ஒரு கண் இருந்தது. தனிமையின் பிடியில் இருந்த அனுராதாவும் அர்ஜுனின் கவனிப்பிலும் உதவியிலும் மயங்கினார். அவர்களின் நட்பு படிப்படியாக இரகசியத் தகாத உறவாக மாறியது. திருமணத்திற்கு முன்பே இந்த உறவு தொடங்கியது. இந்த உறவை நீண்டகாலம் தொடர வேண்டும் என்றால் யாருக்கும் சந்த...