2500 மகளிர் உரிமைத்தொகை! வெளியான பரபரப்பு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டம் உடனடியாக அமலுக்கு வராது என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மேலும் ஓராண்டு காலம் தேவைப்படும் என நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.சித்திக் விளக்கமளித்துள்ளார். 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய த.சித்திக், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். அரசின் வருவாய் கணிசமாக உயர்ந்த பின்னரே உயர்த்தப்பட்ட ரூ.2,500 உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். பட்ஜெட்டில் உதவித்தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பச் செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொகை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என பலர் நம்பியிருந்தனர். நிதி சவால் கு...