“வீட்டு வேலை இல்ல.. பாலியல் உறவு..” ஏமாற்றப்பட்ட மாணவிகள் பாலியல் தொழிலில் சிக்கிய பகீர் பின்னணி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், வீட்டுப் பராமரிப்புப் பணிக்கான விளம்பரத்தை நம்பி புளோரிடாவுக்குச் சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல், ஆவணங்கள் பறிக்கப்பட்டு, லேக் வொர்த் பீச்சில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டதாக பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகத்துக்குத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், Indeed என்ற வேலைத் தளத்தில் வீட்டுப் பராமரிப்புப் பணிக்கான விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்திருக்கிறார். விளம்பரத்தில் மணிக்கு 35 டாலர் ஊதியம், தங்குமிடம், போக்குவரத்து வசதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. தொலைபேசியில் பேசியவர்கள், பாம் பீச் கவுண்டியில் உள்ள விடுமுறை வீடுகளைச் சுத்தம் செய்யும் பணி என்றும், விமானப் பயணச் செலவைத் தாங்களே ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளனர். குடும்பத்துக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி மாதம் அவர் மியாமி சர்வதேச விமான நிலையம் வழியாக புளோரிடா வந்தடைந்தார். ஒர...