Posts

Showing posts with the label bathroom accident

விடிஞ்சா கல்யாணம் குளியலறையில் சடலமான மணமகள்..! நடந்து என்ன..?

Image
திருத்தணை, அக்டோபர் 31: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், அத்திமஞ்சேரிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ராமுவின் மகன் மணியின் திருமணத்திற்கு முன்னதாகவே, வருங்கால மருமகள் சந்தியா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், இரு வீட்டினரையும் பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இன்று (அக்டோபர் 31) திட்டமிட்டிருந்த திருமணம் ரத்து ஆகியுள்ளது. பட்டதாரியான மணி, அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞராவார். அவருக்கு ஆந்திர மாநிலம், நகரி அருகிலுள்ள சித்தாளப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகள் சந்தியாவுடன் இரு வீட்டினரின் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) ஆந்திராவின் பல்ஜே கண்டிகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. முந்தைய நாள் (அக்டோபர் 30) இரவு, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக புறப்படத் தயாராகியிருந்தபோது, சந்தியா குளியலறைக்குச் சென்றாள். வெகு நேரம் கழித்தும் வெளியே வராததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அங்கு சந்தியா சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அனைவரும் அதி...