Posts

Showing posts with the label phone explosion

சென்னையை உலுக்கிய மரணம்.. மொட்டை மாடியில் BIRIYANI.. மின்னல் வெட்டி பறிபோன உயிர்.. சென்னையில் பயங்கரம்..

Image
சென்னை, அக்டோபர் 8 : நண்பர்களுடன் முகப்பேரில் மொட்டைமாடியில் அமர்ந்து சூடான பிரியாணி சாப்பிடும் அதிர்ஷ்டத்தில் இருந்த கல்லூரி மாணவர் முகுந்தன், திடீர் மழையின் இடி-மின்னலில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், பருவமழை காலத்தை நெருங்கும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் கூட சில நொடிகளில் வெடித்த சிதறியது. அருகிலுள்ள பனை, தென்னை மரங்களும் மின்னல் தாக்கத்தில் தீப்பிடித்தது. முகப்பேரு மேற்கு 6ஆவது பிளாக்கைச் சேர்ந்த 20 வயது முகுந்தன், தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். அருகிலுள்ள நண்பர் தனுஷின் வீட்டிற்கு சென்ற அவர், சக நண்பர்களுடன் பிரியாணி பார்சல் வாங்கி மொட்டைமாடியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். அப்போதே வானம் மாற்றம் காட்டியது - கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இடி-மின்னல் தொடங்கிய நொடியில், ஒரு சக்திவாய்ந்த மின்னல் நேராக முகுந்தனைத் தாக்கியது. மின்னல் அவரது வாய், நெற்றி பகுதிகளைத் தொட்டு காயங்கள ஏற்படுத்தியது. உடனடியாக மயங்கி சரிந்த அவரைத் தூக்கி எடுக்கும் போது, சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் ...