ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி.. கதவை திறந்து பார்த்த கொடூர காட்சியால் பேரதிர்ச்சியில் உறைந்த கணவன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ரோகிணி (வயது 30) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி ரோகிணி, இரண்டரை வயது குழந்தையை உறவினர்களிடம் விட்டுவிட்டு, ராஜேஷின் தந்தையைப் பார்க்க சென்னைக்கு திருவனந்தபுரம் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர். ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரோகிணி கழிவறைக்குச் சென்று முகம் கழுவச் சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் இருக்கைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், ரயிலில் கழிவறை கதவை திறந்து பார்த்த போது அங்கே அவர் இல்லை.. அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரோகிணியை தேடியபோது, வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதி தண்டவாளத்தி...