இந்தியாவில் இதைத்தான் அதிகம் தேடுகிறார்கள் - போட்டுக்கொடுத்த கூகுள்..! - ஷாக்கிங் ரிப்போர்ட்
இந்தியாவில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களை விட டேட்டிங் செல்வதற்கான இணையதளங்களை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் ஆன்லைனில் டேட்டிங் தொடர்பான தகவல்களை ஆர்வமாக தேடுபவர்கள் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது. கூகுள் இணையதளத்தில் மட்டும் 37 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் டேட்டிங் தொடர்பான வெப்சைட்டுகளில் தகவல்களை தேடிப்பார்த்துள்ளனர். இதே காலக்கட்டத்தில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. எவ்வளவு பேர் டேட்டிங் தகவல்களை தேடிப்பார்த்தனர் என்ற எண்ணிக்கையை கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. என்றாலும் திருமண வரன் தேடுபவர்களை விட டேட்டிங் செல்வதற்கான இணையதளங்களை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டும் தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மேட்ரிமோனி வெப்சைட்டில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜோடியை தேடிய 6 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தி உள்ளனர். இதில்...