‘நீ பண்றது தான் டா.. நல்ல சு**மா இருக்கு..’ பாட்டியை தீர்த்து கட்டிய ஜாய் மெட்டில்டா.. கள்ளக் காதலனுக்காக புருஷனையும்..
அன்னூர், அக்டோபர் 31: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாட்டியை கொலை செய்து அதை மறைத்த இளம்பெண், பின்னர் கணவனைக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை கொலைத் திட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர், போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது. கஞ்சப்பள்ளி பிரிவைச் சேர்ந்த 33 வயது லோகேந்திரன், பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவரது 27 வயது மனைவி ஜாய் மெட்டில்டா, அன்னூர் சவுத் இந்தியன் பென்வெஸ்ட் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தம்பதிக்கு 6 வயது மகன் உள்ளார். இவர்களுடன் 70 வயது மெட்டில்டாவின் பாட்டி மயிலாத்தாள் வசித்து வந்தார்.விசாரணையின்படி, மெட்டில்டா தனது வேலையின் போது கர்நாடக மாநில சிக்பலாப்பூர் கிளை அலுவலக மேலாளர், 25 வயது நாகேஷுடன் அறிமுகமானார். வீடியோ கால் மீட்டிங்கள் மூலம் தொடர்ந்து பேசியபோது, திருமணப் பந்தத்தை மீறி இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டனர். நாகேஷ், மெட்டில்டா...