சீக்கிரம் கர்ப்பம் ஆவது எப்படி? ரகசியம் உடைத்த மருத்துவர்!
சென்னை : திருமணமான புதிதில் பல தம்பதிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அழுத்தங்களில் ஒன்று கர்ப்பம் தரிப்பது. “கல்யாணம் ஆகி மூன்று மாதம்கூட ஆகல, மாதவிடை வருதே டாக்டர்” என பல பெண்கள் கவலையுடன் மருத்துவரை நாடுகின்றனர். இந்தச் சூழலில், பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் தீப்தி ஜம்மி அவர்கள், “விரைவாக கர்ப்பம் அடைய வேண்டும் என்றால், முதலில் அழுத்தத்தை குறைத்து, இயற்கையான முறையில் முயற்சி செய்யுங்கள்” என்று முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். இன்றைய இளம் தம்பதிகளுக்கு இணையம் மூலம் ஏராளமான தகவல்கள் கிடைத்தாலும், உண்மையான புரிதல் குறைவாகவே உள்ளது. முன்பெல்லாம் 21-22 வயதில் திருமணம் ஆகும் நிலை இப்போது மாறி, படிப்பு, வேலை என செட்டில் ஆன பிறகே திருமணம் நடைபெறுகிறது. இதனால் பெண்களின் வயது 26-27 ஆகவும், ஆண்களின் வயது 30 ஆகவும் இருக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இதனால் சமூக அழுத்தமும், உணர்ச்சிப்பூர்வமான பதற்றமும் அதிகரிக்கிறது. இயற்கையான கர்ப்பம் – 70-80% வெற்றி வாய்ப்பு! டாக்டர் தீப்தி ஜம்மி கூறுகையில், “நல்ல உடல்நிலையில் உள்ள தம்பதிகளுக்கு, ஒரு வருடம் பாதுகாப்பு இல்லாத உடலுறவில் 70 முதல் 80 சதவீதம் பேர...