அஜித்திற்கு ஒன்றரை கோடி ரசிகர்கள் இருகிறார்கள் - விஜய்க்கு.... - பிரபல இயக்குனர் ஒப்பன் டாக்
தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு திரையில் பார்க்கும் ரசிகனை தாண்டி சினிமா பிரபலங்கள் கூட நிறைய பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில், இயக்குனர் சரண் விஜய், அஜித் குறித்து தனது கருத்தை சமீபத்திய பேட்டியில் பதிவு செய்துள்ளார். நடிகர் அஜித்தின் காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை இயக்கியவர் சரண். பேட்டியில், "அஜித்திற்கு ஒன்றரைக் கோடி முகங்கள் ரசிகர்களாக இருக்கின்றன. தற்போது அவரை வைத்து படம் எடுத்தால் அந்த ஒன்றரைக் கோடி பேருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் படம் எடுக்கவேண்டும். அதனால், அவர் மீது இருக்கும் பிரெஷர் அதிகம்" என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் "விஜய்யும் அதற்கு நிகரான ஒருவர் தான். அவருடைய ரசிகர்களும் அவரிடமிருந்து நல்ல படத்தை எதிர்பார்பார்கள். அவரை இயக்கம் வாய்ப்பு கிடைத்தால் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்பிற்கு தகுந்த கதை எழுதி படம் இயக்குவேன்" என தெரிவித்துள்ளார்.