என்ன இது..? இப்படி இருக்கு..? முதலிரவில் மணப்பெண்ணிடம் மிருகத்தனம்.. புதுமாப்பிள்ளை அதிரடி கைது! கொடூரம்..!
நாகப்பட்டினம்: திருமணமான முதலிரவில் மனைவியின் அனுமதியின்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கணவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தொழுதூர் உச்சிமேடு தெருவைச் சேர்ந்த பிச்சையன் மகன் ராஜ்குமார் (வயது 37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் குதம்பநயினார் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகள் நளினிக்கும் (வயது 26) கடந்த ஜூன் 27-ம் தேதி நாகை அருகே ஆலத்தம்பாடி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. 12 பவுன் நகை உள்ளிட்ட சீர்வரிசையுடன் சிறப்பாக நடந்த இத்திருமணத்தில் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அன்றிரவு முதலிரவில் ராஜ்குமார், நளினியிடம் அனுமதியின்றி மிருகத்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, அச்சத்தில் மயக்கமடைந்த நளினியை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட...