Posts

Showing posts with the label Ambattur police

தடம் மாறிய பெண் எஸ்.ஐ தவித்து நின்ற இரு பிஞ்சுகள் கைகொடுத்த முதல் கணவன்..! காவலில் மலர்ந்த காதல் சோகங்கள்

Image
சென்னை : அம்பத்தூர் T1 காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக (Sub-Inspector) பணியாற்றி வந்த அந்தோனி மாதா (வயது 30) என்ற பெண் காவலர், டிசம்பர் 14, 2025 அன்று இரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரம்: நள்ளிரவு 12:30 மணியளவில் அந்தோனி மாதா, மீஞ்சூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் என்பவருடன் வீடியோ காலில் பேசியபோது, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சித் குமார் அம்பத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து சென்று படுக்கை அறைக் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அந்தோனி மாதா தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. குடும்ப பின்னணி மற்றும் உறவு: அந்தோனி மாதா, கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் ஐயப்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். ரஞ்...