Posts

Showing posts with the label Life Insurance

காப்பீடு என்றால் என்ன..? - உங்களுக்கு காப்பீடு முக்கியமா..? - அனைவரும் படிக்க வேண்டிய பதிவு

Image
வாழ்க்கை எப்பொழுதும் தன்னுள் ஆச்சர்யத்தைப் பொதித்து வைத்துள்ளது. எதிர்பார்க்காத நிகழ்வுகள் நம்முடைய வாழ்வை எப்பொழுது வேண்டுமானாலும் தடம் புரளச் செய்து விடலாம். எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.  அத்தகைய புத்திசாலித்தனமான ஒரு முயற்சியே காப்பீடு. எளிய வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டும் என்றால் காப்பீடு என்பது ஆபத்தைப் பறிமாற்றிக் கொள்ள உதவும் ஒரு அற்புத ஆயுதம் ஆகும். காப்பீடு என்பது நீண்ட நெடுங்காலமாகப் பல வடிவங்கள் மற்றும் முறைகளில் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. பண்டைய காலங்களில் இறந்தவர்களின் உடலைப் புதைக்கும் சடங்கைப் பின்பற்றி வந்த குழுக்களிடம் இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது.  அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது. அந்தத் தொகை சடலத்தைப் புதைக்கும் நபருக்கு ஏதேனும் ஒரு தீங்கு ஏற்பட்டால் அவருடைய குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. ஆபத்தைச் சந்திக்கும் நபருக்கான சன்மானமாக இது கருதப்பட்டது. இது ஒரு பழமையான காப்பீடாகக் கருதப்படுகின்...