Posts

Showing posts with the label Mr.Local Tamil Movie

எதிர்மறை விமர்சனம் வந்த நிலையிலும் மிஸ்டர்.லோக்கல் வசூல்..! - ஷாக்கிங் ரிப்போர்ட்..!

Image
சீமராஜா தோல்வி அடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த Mr.லோக்கல் படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. முதல் காட்சி முடிந்தது முதல் இந்த படம் பற்றி மோசமான விமர்சனங்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 6 கோடி வசூலித்துள்ளது. தற்போது இரண்டாம் நாள் சென்னை வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் இரண்டாம் நாளில் 62 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தம் இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் 1.3 கோடி ருபாய் வசூல் வந்துள்ளது.

கடந்த படங்களில் இருந்த அந்த குறை மிஸ்டர்.லோக்கலில் இருக்காது..! - நடிகர் சிவகார்த்திகேயன்

Image
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள, "மிஸ்டர் லோக்கல்" படம் வரும் மே 17ம் தேதி ரிலீஸாகிறது. ரோபோ சங்கர், சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சிவகார்த்திகேயன் பேசியதாவது : மிஸ்டர் லோக்கல் மிக எளிமையான, முழுக்க முழுக்க காமெடியான, ஜாலியான படம். சின்ன சின்ன விஷயங்கள் புதிதாக சேர்த்திருக்கிறோம். டிவியில் இருந்த காலகட்டத்திலேயே ராஜேஷின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. எஸ்எம்எஸ்., படத்தில் "அடங்காபிடாரி..." பாடலில் ரஜினியின் "படையப்பா" வசனத்தை நான் தான் டப்பிங் பேசினேன். அப்போது இருந்தே அவருக்கும், எனக்கும் பழக்கம் உண்டு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும், ராஜேஷின் மூலமாகத்தான் எனக்கு வந்தது. அதையடுத்து அவர் உடன் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டேன். அதற்கு சரியான நேரம் அமையவில்லை. மிஸ்டர் லோக்கல் படத்தில் தான் அது அமைந்தது. இப்படத்தின் பிளஸ், இதில் நடித்த நடிகர்கள் தான். ஏனென்றால் மக்கள் ரசிக்கிற நடிகர்கள் தான் நடித்துள்ளனர். வேலைக்கார...

மேடம் தாங்க மேனாமினுக்கி.. காதுல பாரு கோல்டு ஜிமிக்கி - மிஸ்டர்.லோக்கல் வீடியோ பாடல்..!

Image
சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர்.லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.  படத்தின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக படம் மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் படம் மே 17-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மேனாமினுக்கி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.