கிணற்றில் கிடந்த இரண்டு சடலங்கள்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் உண்மை..!
விருதுநகர், நவம்பர் 8: கல்யாண வீட்டில் திடீரென மாயமான சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமாரும் சுரேஷ்குமாரும், ஒரு வாரத்திற்குப் பிறகு வேப்பிலைபட்டியில் உள்ள பாழடைந்த உரைக்கிணற்றில் அழுகும் நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, விவசாயத் தோட்ட உரிமையாளர்கள் மணிகண்டன், சுதாகர் ஆகியோர் சடலங்களை மறைக்க முயன்றதும் வெளிப்பட்டதால், அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். கடந்த அக்டோபர் 31 அன்று, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள தொம்பைக்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பிரியாவிற்கு இடையேயான திருமணம், வேப்பிலைபட்டியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய நள்ளிரவு, விக்னேஷின் உறவினர்களான சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமாரும் (35), சுரேஷ்குமார் (32) ஆகியோர் குடும்பத்துடன் வேப்பிலைபட்டிக்கு வந்து சேர்ந்தனர். கோயில் மண்டபத்தில் தங்கியிருந்த இவர்கள், அடுத்த நாள் அதிகாலை சுமார் நாறு மணியளவில் இயற்கை உபாதைக்காக வெளியேறினர்....