"டாக்டர் அப்டேட் தாடா.." - மரியாதை இல்லாமல் அப்டேட் கேட்ட ரசிகருக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பதிலை பாருங்க..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' திரைப்படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டால், கிருஸ்துமஸ் விடுமுறை தினமான டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் நடிகர் ஒருவரின் படத்தின் தொலைக்காட்சி உரிமை படம் வெளியீட்டுக்கு முன்னரே விற்பனையாகிறது என்றால் அது விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படமாகத்தான் இருக்கும் என்று திரை உலக வணிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்களுக்கு குடும்ப பெண்கள் ரசிகர்கள் அதிகம். அவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான் என இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதில் 'கோலமாவு கோகிலா' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'டாக்டர்'. இந்தப் படத்தின் 90% காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் 10 சதவீத காட்சிகளை, கோவாவில் படமாக்கப்பட வேண்டும். தற்போது கோவா மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழக அரசு ...