சொந்த மகளின் பிறப்புறுப்பில் அதை சொருகி கொடூரம்.. நடுக்காட்டில் தாய் செய்த காது கூசும் அசிங்கம்!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள குசும்பா (Kusumbha) கிராமத்தில், மகனின் உடல் மற்றும் மனநலக் குறைபாட்டை குணப்படுத்துவதற்காக தனது 13 வயது மகளையே நரபலி கொடுத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூடநம்பிக்கை சார்ந்த கொலை வழக்கில், சிறுமியின் தாய், ஒரு மந்திரவாதினி மற்றும் தாயின் ஆண் நண்பர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 வயதான ரேஷ்மி தேவி என்பவர், திருமணமான பெண். அவருக்கு 13 வயது மகளும், 11 வயது (சில தகவல்களில் 16 வயது எனக் கூறப்படும்) மகனும் உள்ளனர். கணவர் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில், ரேஷ்மி தனது குழந்தைகளுடன் கூலி வேலைகள் செய்து வாழ்ந்து வந்தார். மகனுக்கு நீண்ட நாட்களாக உடல்நலக் குறைபாடு இருந்ததால், பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாததால், அக்கம் பக்கத்தினரின் அறிவுரையின் பேரில் 55 வயதான சாந்தி தேவி (Shanti Devi) என்ற மந்திரவாதினியிடம் அழைத்துச் சென்றார். சாந்தி தேவி, சிறுவனை அமர வைத்து பூஜை செய்துவிட்டு, “உங்கள் வீட்டில் உள்ள உங்கள் மகளால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காளி தேவிக்கு கன்னிப் பெண்ணான உங்கள் மகளை நரபலி கொடுத்தால...