Posts

Showing posts with the label Mumbai beach

“நள்ளிரவு 02:30 மணிக்கு எடுக்கப்பட்ட SELFIE..” இது தான் இந்த பெண்ணின் கடைசி செல்ஃபி! 02:30 to 04:00AM வரை நடந்த கொடூரம்!

Image
மகாராஷ்டிராவின் மும்பைக்கு அருகிலுள்ள அழகிய சிறிய நகரம் பாய்ச்சர். நவம்பர் 30, 2021 அன்று காலை 10 மணியளவில், அந்த ஊரின் போலீஸ் நிலையத்திற்கு ஒரு வயதான தம்பதியர் பதட்டத்துடன் வந்தனர். அவர்களின் மகள் வீட்டுக்கு வரவில்லை என்று அவர்கள் கவலைப்பட்டனர். போலீஸ் அதிகாரி அவர்களை அமரச் செய்து, தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தினார். “என்ன நடந்தது?” என்று பொறுமையாகக் கேட்டார். தம்பதியர் கண்ணீருடன் சொன்னார்கள்: “எங்கள் மகள் சதீஷா, 23 வயது. மும்பையில் உள்ள கிராண்ட் கவர்ன்மெண்ட் மெடிக்கல் காலேஜில் (ஜேஜே ஹாஸ்பிடல் இணைப்பு) எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். நேற்று (நவம்பர் 29) மதியம் 2:30 மணிக்கு எக்ஸாம் இருந்தது. காலையில் வீட்டில் இருந்து கிளம்பினாள். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கிறது.” அவர்கள் மேலும் சொன்னார்கள்: “சில சமயங்களில் எக்ஸாம் முடிந்ததும் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவழிப்பாள். ஆனால் இன்று காலை வரை வராததால் பயமாக இருக்கிறது.” சதீஷா தினசரி பாய்ச்சரில் இருந்து ரயிலில் 2-3 மணி நேரப் பயணம் செய்து கல்லூரிக்குச் செல்வதாகவும் தெரிவித்தனர். சிசிடிடிவி காட்ச...