அப்போ.. LEO மொத்தமே ரூ.404 கோடி தானா? வருமான வரி தாக்கலால் அம்பலம்..! ஒட்டுமொத்தமாவே ஓவர் டேக் செய்த “COOLIE”
2023 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் லியோ திரைப்படம், உலகளவில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் லலித்குமார் விளம்பரப்படுத்தி, இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் நாளில் 148.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்ததாகவும், 4 நாட்களில் 405.5 கோடி, 7 நாட்களில் 461 கோடி, 12 நாட்களில் 540 கோடி என படிப்படியாக 600 கோடி வசூலை எட்டியதாகவும் புரமோஷன்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் மீது தொடக்கத்திலிருந்தே சந்தேகங்கள் எழுந்தன. காரணம், லியோவை விட 4,000 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்ட ஷாருக்கானின் பதான் படம் முதல் நாளில் 104 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இதனால், லியோவின் வசூல் கணக்கு மீது கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த கணக்கு, படத்தின் உண்மையான decine:0உண்மையான வசூலை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, லியோ படம் திரையரங்குகளில் 160.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. மீதமுள்ள தொகை டிஜிட்டல் உரிமம் (124 கோடி), ஆடியோ உரிமம் (24 கோடி), இந்தி உரிமம் (24 கோடி), மற்றும் ...